ETV Bharat / international

மூன்று நாடுகளிடம் முக்கியக் கோரிக்கை வைக்கும் நகோர்னா - காராபாக் பிராந்தியம் - அர்மேனியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள்

நகோர்னா - காராபாக் தன்னாட்சிப் பிராந்தியத்தில் மூன்று நாடுகளின் கூட்டு பயங்கரவாத தடுப்பு மையத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

Nagorno-Karabakh
Nagorno-Karabakh
author img

By

Published : Oct 12, 2020, 12:21 PM IST

ஆசிய - ஐரோப்பாவை இணைக்கும் பகுதிகளான அர்மேனியா - அசர்பைஜான் எல்லைகளில் இரு நாடுகளும் போரிட்டு வருகின்றன. குறிப்பாக, சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ - காராபக் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நகோர்னா - காராபாக் தன்னாட்சி பிராந்தியமாகத் திகழ்ந்து வரும் நிலையில், இந்தப் போருக்கு தீர்வாக தன்னாட்சி பிராந்தியம் சார்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்நாட்டு நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிராந்திய அமைதியைக் கொண்டுவர அர்மேனியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து, கூட்டு பயங்கரவாத தடுப்பு மையத்தை ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் கூட்டு பயங்கரவாத தடுப்பு மையத்தின் மூலம் சர்தேச பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க முடியும். பிராந்தியத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக அங்கு பயங்கரவாதிகளை கட்டவிழ்த்துவிடும் அசர்பைஜான் அரசை கண்டிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேல் பிரதமரை பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.