பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும், ராணுவ ஆட்சியை அமல்படுத்தியவருமான பர்வேஸ் முஷாஃரப் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் முஷாஃரப் குற்றவாளி எனக் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை அளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து முஷாஃரப் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 90 பக்கங்களைக் கொண்ட அந்த மேல்முறையீட்டு மனுவில், முஷாரஃப் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை. அவர் தரப்பு நியாயங்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதலைபட்சமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதியன்று இஸ்லாமாபாத்தை தலைமையகமாகக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் முஷாரப்பிற்கு மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இராணுவத் தலைவர் உயர் தேசத்துரோக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்தது.
பர்வேஸ் முஷாரஃப் துபாயில் வசித்து வருகிறார். அவருக்குத் தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் துபாயில் உள்ள நீதிமன்றத்தில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உயிருடன் பிடிபடாவிட்டால் முஷாரப்பின் சடலம் தூக்கில் தொங்கவிடப்படும் - பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம்