பாகிஸ்தானில் கரோனா பெருந்தொற்று காரணமாக, ரமலான் மாதத்தில் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படுமா... இல்லையா... என்ற குழப்பம் நிலவிவந்தது.
இந்தக் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரமலான் மாதத்தில் மசூதிகள் திறக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஆரிஃப் அலி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதேவேளையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும்; அதனை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மதத் தலைவர்களுடன் இன்று நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே, இந்த முடிவுக்குத் தான் வந்ததாகக் கூறிய அதிபர் அலி, இந்த விஷயத்தை பாகிஸ்தான் அரசும், மதத் தலைவர்களும் ஒரு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரமலான் மாதம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் ஏழு ஆயிரத்து 516 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கரோனா போரில் களமிறங்கும் நாசா!