ETV Bharat / international

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆஸ்திரேலியா பிரதமர் நேரில் அஞ்சலி - அஞ்சலி

நியூசிலாந்து: கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரு மசூதிகளில் நடந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஆஸ்திரேலியா பிதமர் மற்றும் நியூசிலாந்து பிரதமர் சந்திப்பு
author img

By

Published : Mar 29, 2019, 5:00 PM IST

நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரை பகுதியான கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தீவிரவாதி தானியங்கி துப்பாக்கி மூலம் சுட்டதில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உலக நாடுகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்த தாக்குதலுக்கு பிறகு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசுமுறை பயணமாக இன்று நியூசிலாந்து வந்தார். அவரை நியூசிலாந்து பிரமர் ஜெசின்டா ஆண்டர்ன் வரவேற்றார். பின்னர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இடத்திற்கு சென்ற அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரமாக சந்தித்து கொண்டனர். அப்போது பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், “தீவிரவாத தாக்குதலுக்கு நியூசிலாந்து மக்கள் வெறுப்பை காட்டாமல் அன்பை பொழிவது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த தாக்குதலுக்கு அமைதியான முறையில் பதிலடிக் கொடுத்த நியூசிலாந்து மக்களை நான் வெகுவாக பாராட்டுகிறேன். மேலும் வன்முறைக்கு எதிராக நியூசிலாந்து மக்கள் அமைதியான முறையில் போராடுவது மிக பெரிய பலம். இதை நான் சக்தி வாய்ந்த செயலாக கருதுகிறேன்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.