இந்தியப் பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கவிருக்கிறார். இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பை இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூறியிருப்பதாவது, இந்திய சீனா இடையே சுமுகமான நட்பு உறவு இருந்துவருகிறது. இதற்கு முன்னர் இரண்டு முறை சீன அதிபரை மோடி சந்தித்திருக்கிறார். அலுவல் ரீதியாக அல்லாமல் நட்பு ரீதியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில், ஆட்சி அமைத்த பிறகு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் முதல் முறை சந்திக்கவிருக்கிறார், இச்சந்திப்பும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கிர்கிஸ்தானில் ஜுன் 13, 14 தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. அதற்காகவே இரு நாட்டுத் தலைவர்களும் சந்திக்கின்றனர் என்று இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.