இது தொடர்பாக ரஷ்யாவின் விளாடிவொஸ்டாக் நகரில் நடைபெற்றுவரும் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் (East Economic Forum) கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "என்னைப் பொறுத்தவரை இந்த மாநாடு தொலை கிழக்கு நாடுகளின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமுதாய வளர்ச்சிக்கு பயன்படும்.
இந்தியா - தொலை கிழக்கு நாடுகளின் உறவு என்பது நூற்றாண்டு பழமையானது. விளாடிவோஸ்டாக் நகரில் தூதரகத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா. சோவியத் ஒன்றியம் காலத்திலிருந்தே, விளாடிவோஸ்டாக் நகருக்கு செல்ல வெளிநாட்டவருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும், இந்தியர்களுக்கு அந்த கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
புதிய இந்தியா கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். தொலைதூர கிழக்கு நாடுகளின் வளர்ச்சிக்காக ரஷ்யாவுடன் இந்தியா சேர்ந்து பயணிக்கும். மேலும், ரஷ்யாவின் தொலை கிழக்கு பிராந்திய வளர்ச்சிக்காக இந்தியா சார்பாக ரூ.7 ஆயிரம் கோடி கடனளிக்கப்படும்" என்றார்.