இலங்கையில்தான் உலகளவில் புகழ்பெற்ற புத்தர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் புத்தர் கோவில் திருவிழாவில் புத்தரின் புனித பொருட்கள் கண்டியில் உள்ள மலைப்பகுதிக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். சுமார் 90 கி.மீ தூரம் கொண்ட ஊர்வலத்தில் மொத்தம் 100 யானைகள் பங்கேற்கும். அதில் புத்தரின் புனித பொருட்களைக் கொண்டு செல்வதுதான் ராஜா என்னும் 65 வயது யானை. எனவே இலங்கையின் பொக்கிஷமாகவே ராஜா யானையைக் கருதுகின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு யானை சாலையில் செல்லும்போது இரு சக்கர வாகணம் மோதி காயம் ஏற்பட்டது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த இலங்கை அரசாங்கம் நாட்டின் சொத்தான ராஜா யானையைப் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள 24 மணி நேரமும் ராணுவ பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.’
இதனால் ராஜா யானை தினந்தோறும் நடைப்பயிற்சி செல்லும்போது இரண்டு உதவியாளர்கள் மட்டுமின்றி ராணுவப் படை வீரர்களும் உடன் செல்வார்கள். இந்த யானையின் புகைப்படங்கள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் உலகளவில் மக்களைக் கவர்ந்த 70 வயது டிக்கிரி யானை உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: துரத்தும் ஒற்றை காட்டுயானை - அச்சத்தில் வாகன ஓட்டிகள்!