ETV Bharat / international

ஷாங்காங் உச்சிமாநாட்டுக்கு பாகிஸ்தானை அழைக்கணுமா? - தர்மசங்கடத்தில் இந்தியா

இந்தாண்டிற்கான ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், உறுப்பு நாடான பாகிஸ்தானை அழைக்கும் நிர்பந்தத்தில் இந்தியா உள்ளது. இதனை இந்தியா எப்படி கையாளப்போகிறது என்பது விவரிக்கிறார் முன்னாள் தூதர் விஷ்ணு பிரகாஷ்.

author img

By

Published : Jan 31, 2020, 12:08 PM IST

Shangai Cooperation Summit, ஷாங்காய் உச்சிமாநாடு
Shangai Cooperation Summit

19ஆவது ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் பின்பற்றப்படும் வழிமுறைகளின் அடிப்படையில், எட்டு உறுப்பு நாடுகள், நான்கு மேற்பார்வையாளர் நாடுகள், சில சர்வேதச அமைப்புகள் ஆக்கும் அழைப்பு விடுக்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கடந்த 16ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில், ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தானும் உறுப்பு நாடாக உள்ளதால் கண்டிப்பாக அந்நாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத குழுக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் நம்பகத்தகுந்த, மாறுதலுக்கு இடம் இல்லாத, வெளிப்படையான நடவடிக்கைளை மேற்கொள்ளும் வரை அதனுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என இந்தியா கூறிவந்த நிலையில், பாகிஸ்தானை ஷாங்காங் உச்சிமாநாட்டுக்கு அழைப்பதென்பது பெரும் முரணாக அமையும்.

அப்படியானால், இந்தியா அதன் நிலைபாட்டை திடீரென மாற்றிக்கொண்டதா?, எதனால் இது நடந்தது?, உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா வருவாரா? என எல்லோர் மனதிலும் பல கேள்விகள் எழுத்துள்ளன. உலக நாடுகள் தற்போது ஏ,பி,சி என மூன்று விதமான சவால்களை எதிர்கொண்டுவருகின்றன.

முதல் சவால்:

ராஜதந்திர வழிமுறைகளைப் பின்பற்றும் பொறுமையில்லாத, தெர்மாமீட்டரில் இருக்கும் மெர்குரியைப் போன்று எந்நேரமும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காதான் - முதல் சவால் 'ஏ'. வாக்குவங்கியைத் தக்கவைக்கும் பொருட்டு ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் நட்பு நாடுகள், எதிரி நாடுகள் என அனைவரையும் எரிச்சலூட்டிவருகிறது.

இரண்டாம் சவால்:

அடுத்த சவால் 'பி' - பிரெக்ஸிட் . ஜனவரி 31ஆம் தேதியோடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறவிடும். இது ஐரோப்பிய ஒன்றியத்தை வலுவூட்டுமா, வலுவிழக்கச் செய்யுமா, பிரெக்ஸிட் ஐரோப்பிய பொருளாதாரம் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், நாட்டோ அமைப்புக்கு என்ன ஆகும் போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. நாட்டோவின் பொதுச் செயலாளர் ஜீன்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூறுகையில், "பிரெக்ஸிட்டை தொடர்ந்து, நாட்டோவுக்கு வரும் 80 சதவிகித ராணுவ செலவுகள் ஐரோப்பியா அல்லாத நாடுகளுக்கு வரும்” என்றார்.

மூன்றாம் சவால் :

சி - என்றால் சீனா. சீனாவின் எதிர்பாராத அபரிமித எழுச்சி, அதன் லட்சியம், அடாவடித்தனம் ஆகியவை இந்தோ-பசிபிக் உள்ளிட்ட பிராந்தியங்களை அச்சுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் எந்த நாடும் கண்டிடாத அளவிற்குச் சீன கப்பற்படை ஆஜானுபாகுவாக வளர்ச்சி கண்டுள்ளது.

ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தியா எனப் பெரும்பாலான அண்டை நாடுகளிடம் சீனா மோதலில் ஈடுபட்டுவருகிறது. தென் சீன கடல் பகுதியை ஏற்கனவே தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ள சீனா, கராட்சி, ஜிபௌடி உள்ளிட்ட நாடுகளிலும் ராணுவ தளங்களை அமைத்துள்ளது.

பெல்ட் அண்ட் ரோடு என்று அழைக்கப்படும் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் மூலம், பல்வேறு நாடுகளைக் கடன் வலையில் சீனா சிக்கவைத்துள்ளது.

இந்தியாவின் நான்காம் சவால் :

இவையில்லாமல் இந்தியாவுக்கென நான்காவது சவால் ஒன்று உள்ளது. அதன் வேறொன்றுமில்லை பயங்கரவாதம்தான். இதனைக் கடந்த நான்கு தசாப்தங்களாக ஊக்குவித்துவருகிறது சீனாவின் உற்ற நண்பனான பாகிஸ்தான். இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதே இந்த இரண்டு நாடுகளின் பொது கொள்கையாக உள்ளது. கடந்த 60 வருடங்களாக இந்தியா, பாகிஸ்தானுடனான மோதல்களைத் தீர்த்துக்கொள்ள பொறுமையைக் கையாண்டுவருகிறது.

எனினும், எதற்கும் பிடிகொடுக்காத பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்தியா ஒரு முடிவுக்கு வந்துள்ளது. பயங்கரவாதமும் அமைதிப் பேச்சுவார்த்தையும் எப்போதும் ஒன்றுக்கொண்டு ஒத்திசையாதென்பதே அது. இதன் காரணமாகவே, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அறிக்கை பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

சீனா தலைமையில் 2001ஆம் ஆண்டு உருவான அமைப்பே இந்த 'ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பு'. அப்போது, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், டர்கமினிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றிருந்தன. நாட்டோவுக்கு இணையாக ஆசிய பிராந்தியத்தில் அரசியில், பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ரஷ்யாவின் உதவியோடு 2017ஆம் ஆண்டு இந்தியா இந்த அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தது. அதேவேளையில், சீனாவின் ஆதரவோடு பாகிஸ்தானும் உறுப்பினரானது.

தர்மசங்கடத்தில் இந்தியா

இந்தாண்டு நடைபெறவுள்ள ஷாங்காங் உச்சிமாநாட்டில் பாகிஸ்தான் அழைப்பதைத் தவிர இந்தியாவுக்கு வேறுவழியில்லை. பாகிஸ்தான் அழைக்கப்படவில்லை என்றால் இந்த உச்சிமாநாடு ரத்து செய்யப்படும்.

ஷாங்காங் அமைப்பின் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த, உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவ நினைக்கும் இந்தியா தேவையில்லாத சலசலப்புகளை ஏற்படுத்த விரும்பவில்லை. சீனாவை எதிர்கொள்ள ரஷ்யாவுடன் ஆழமான உறவை ஏற்படுத்தவும், மத்திய ஆசிய நாடுகளுடன் நல்லுறவைப் பேணி காக்கவும் நினைக்கிறது இந்தியா.

பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பை கண்டிப்பாகத் தட்டிக்கழிக்க மாட்டார். இந்தியாவுடன் சுமுகமான உறவை ஏற்படுத்தவே அவர் முயல்வார். ஐநா பாதுபாப்பு சபையில் காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் மீண்டும் சீனா எழுப்புவதற்குக் காரணம், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதே. FATFஇன் தடை செய்யப்பட்ட நாடுகள் பட்டியல் (கருப்புப் பட்டியல்) என்ற கத்தி பாகிஸ்தான் கழுத்துக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கிறது. அதலபாதாளத்தில் உள்ள பொருளாதாரத்தை மீட்க முயற்சித்து வரும் பாகிஸ்தான் இதுபோன்ற தளங்கள் தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டு பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள நினைக்கிறது. FATFஇன் பிரச்னை ஓய்ந்தால், மீண்டும் இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதக் குழுக்களை ஏவத் தொடங்கும்.

ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக இணைந்ததன் பரிசாக இந்தியா, பாகிஸ்தானை அழைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும், இதனை மிஞ்சும் அளவிற்கு ஷாங்காங் அமைப்பு இந்தியாவுக்கு பல நன்மைகளைப் பயக்கக்கூடும்.

இதையும் படிங்க : அமெரிக்கா - சீனா வர்த்தக உடன்பாடு நம்பிக்கையளிக்கிறது!

Intro:Body:

SCO summit Editorial

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.