ஜப்பானில் உள்ள மியாகி ப்ரிஃபெக்சர் (Miyagi Prefecture) பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஜப்பானில் டோக்கியோ உள்பட பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. மக்கள் பலரும் கட்டடத்தைவிட்டு வெளியேறி சாலைக்கு வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை.
மேலும், நிலநடுக்கம் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தைவிட ஒரு மீட்டர் உயரத்துக்குச் சுனாமி அலைகள் எழும்பக்கூடும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மியாகி கடற்கரைப் பகுதியிலும் சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம்தான் இதே கிழக்கு கடலோரப் பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் இந்து பத்திரிகையாளர் கொலை!