சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நாவஸ், தற்போது பிணையில் வெளியே உள்ளார்.
இந்நிலையில், இவர் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்லவதை தடுக்கும் பொருட்டு எக்ஸிட் கண்ட்ரோல் லிட்ஸ் ( Exit Control List) பட்டியலில் இவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து மரியம் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், "எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி என்னுடைய பெயர் எக்ஸிட் கண்ட்ரோல் லிட்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி தேசிய பொறுப்புடைமை பீரோ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே, எக்ஸிட் கன்ட்ரோல் பட்டியலிலிருந்து என்னுடைய பெயரை நீக்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.