டிஸ்கவரி தொலைக்காட்சியில் 'மேன் வெர்சஸ் வைல்டு' என்னும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் நடத்தி வருகிறார். இவர் இந்நிகழ்ச்சியில் காட்டுக்குள் மக்கள் மாட்டிக் கொண்டால், எப்படி தப்பிப்பது என்று கற்றுத் தருவார். எனவே இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவ்வப்போது பிரபலங்களும் இவரது நிகழ்ச்சியில் பங்கேற்பபர்.
அந்தவகையில், பியர் கிரில்ஸ் பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் சாகசப் பயணம் மேற்கொண்டார். அந்த சிறப்பு நிகழ்ச்சி ஆங்கிலம், இந்தி, தமிழ், வங்கம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த நிகழ்ச்சி குறித்து பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "மோடி கலந்துகொண்ட இந்த 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சி முதன்முறையாக உலகம் முழுவதும் 360 கோடி முறை பகிரப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்க கால்பந்து போட்டிக்கு 340 கோடி ட்விட்டுகள் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.