இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுமே மாலத்தீவுடன் நல்ல நட்புறவில் இருந்துவருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா-பாகிஸ்தான் அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் என மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அமைச்சர்முகமது குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவளிக்கக் கோரி மாலத்தீவு அமைச்சரை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நிரந்தர உறுப்பு நாடுகளில் சீனாவைத் தவிர அனைத்து நாடுகளும் பாகிஸ்தானிற்கு உதவ முன்வராத நிலையில், தற்போது அண்டை நாடான மாலத்தீவும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.