பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று லாகூர். இந்த நகரில் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூஃபி என்ற இஸ்லாமியர்களின் புனித தலம் உள்ளது. இந்நிலையில், இன்று காலையில் இந்த புனித தலத்திற்கு வெளியில் நின்றிருந்த காவல் வாகனம் வெடித்துச் சிதறியது. இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். பலியான ஐந்து பேரில் மூன்று பேர் காவல் துறையினர்.
தகவலறிந்து வந்த அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ள சமயத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் புனித தலத்தில் நடைபெற்ற இரண்டு தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.