வட கொரிய அதிபர் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் கோமாவில் உள்ளார் எனவும் பல்வேறு வதந்திகள் கடந்த ஒரு வாரமாக வலம்வருகிறது. இந்தச் செய்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், கிம் உடல்நிலை குறித்து தென் கொரிய அதிபர் மூன் ஜே விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய மூன், கிம் நலமுடன் இருக்கிறார். அவரது உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என நம்புகிறோம். வட கொரியாவில் சந்தேகத்திற்குரிய விதமாக எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.
வட கொரிய அதிபரான சர்ச்சை நாயகன் கிம் ஜாங், இருதய பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை தகவல் அளித்ததாக சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. அதேவேளை கிம் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக வலம்வரும் தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மறுத்துள்ளார்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக வடகொரிய ஊடகங்கள் மௌனம் சாதித்துவருவது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா ரணகளத்திலும் சளைக்காமல் தேரத்தல் நடத்திய தென்கொரியா