இலங்கையின் 8ஆவது அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தது. இதில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஸ்ரீரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சேவுக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.
இதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பாஹா (Gampaha) மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான கவிந்த ஜெயவர்த்தன தேர்தலில் வாக்கு அளித்த பின்னர் நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அதில் ஈடிவி பாரத்தின் நிர்வாக ஆசிரியர் நிஷாந்த் ஷர்மா எழுப்பிய விறுவிறுப்பானக் கேள்விகளுக்கு கவிந்த ஜெயவர்த்தன அளித்த பதில் பின்வருமாறு,
இலங்கை அதிபர் தேர்தலில் உங்கள் கட்சி (ஐக்கிய தேசியக் கட்சி) எப்படி செயல்பட்டிருக்கிறது?
முதலில் இலங்கைக்கு வந்து என்னிடம் பேட்டிக் காண வந்ததிற்கு நன்றி, இலங்கையில் நடைபெறும் அரசாங்கத்தின் நல்ல ஆட்சியால் 2019 அதிபர் தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற்றது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளார் சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் உற்சாகத்தோடு வாக்கு அளித்தனர். நாங்கள் வெற்றியை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இங்கு நடக்கும் தேர்தலை அண்டைய நாடுகள் கவனத்துடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது, அந்நாட்டு தலைவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
இந்நாட்டு குடியுரிமைப் பெற்ற நபரால் மட்டும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சே இன்னும் இந்நாட்டின் உரிமைக்கோரக்கூடியக் குடியுரிமைப் பெற்ற ஆதிகாரப்பூர்வ சான்றிதழ்களை சமர்பிக்கவில்லை. இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு அவர் மீது பெருத்த சந்தேகம் நிலவிவருகிறது.
தேசியத் தலைவர்களுக்கு சொல்ல நினைக்கும் கருத்து...
நாட்டில் கோத்தபாய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் அவர் கட்சியினர் நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், தமிழர்கள், கிறுத்துவர்கள் ஆகிய சிறுபான்மையோரை தனிமைப் படுத்துவதிலே ஈடுப்பட்டுவருகின்றனர். ஆனால் சஜித் பிரேமதாச நாட்டு மக்களிடம் வேற்றுமை பார்பதில்லை.
நாடு வளம் பெற அனைவரும் ஒற்றுமையுடனும் அமையுடனும் வாழவேண்டும் அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.
ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்து அரசிடம் இருந்து எந்த நீதியும் கிடைக்கவில்லை என்று கிறுத்துவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
நானும் கிறுஸ்துவன் தான், சஜித் பிரேமதாச ஒருவரால் மட்டும் இந்த விவகாரத்தில் நல்ல தீர்வைக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன். தேர்தலுக்குப் பிறகு இந்த வழக்கில், புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும் மேலும் குடியரசுத் தலைவர் சார்பாக ஒரு விசாராணை ஆணையம் (presidential commision) அமைத்து இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருந்த நபர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவர்.
இலங்கையில் தமிழர்களுக்கு உங்கள் கட்சி வெற்றிபெற்ற பிறகு செய்ய நினைப்பது என்ன?
சஜித் பிரேமதாச எப்போதும் தன் வாக்கை மீறியதில்லை! அதனால் நாங்கள் வாக்குக் கொடுத்தப்படி இலங்கை வடகிழக்கில் தமிழர்கள் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் அப்பகுதியில் நன்முறையில் பார்த்துக் கொள்ளப்படுவர் இதில் எந்த கவலையும் தேவையில்லை.
இதையும் படியுங்க: இலங்கையில் வாக்காளர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு! - சமூகவிரோதிகள் அட்டூழியம்