ஆப்கானிஸ்தானில் மேற்கு காபூலில், ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் ஒரு பள்ளி அருகே சனிக்கிழமை (மே 8) வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கார் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து இரண்டு ராக்கெட் தாக்குதல்களும் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரியாக, பள்ளி முடிந்து மாணவர்கள் வெளியேறும் சமயத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்த வெடிவிபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தலிபான் அமைப்பும் மறுப்பு தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.