ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், அந்நாட்டின் துணை அதிபர் அமருல்லா சாலே பங்கேற்றார். இந்த நிகழ்வில் அவருக்கு குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் துணை அதிபர் அமருல்லா சாலே, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அதேவேளை, இந்த சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் தாலிபானுக்கு தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தத் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் துணை அதிபராக பொறுப்பேற்ற முதல் நபர் அமருல்லா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் ஆப்கான் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் சீர்குலைக்க நடத்தப்பட்ட சதித் திட்டம் என அரசின் செய்தித் தொடர்பாளர் ரஸ்வான் முராத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜக ஐ.டி பிரிவு தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் சுப்ரமணியன் சுவாமி!