இலங்கையின் புதிய வெளியுறவுத்துறை செயலராக ரவிநாதா ஆர்யசின்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மஹிந்த ராஜபக்ச அதிபராக பதவி வகித்த போது, 2012-14ஆம் ஆண்டு காலகட்டத்தில் கடற்படை தளபதியாக இருந்துள்ளார்.
பொதுவாக, வெளியுறவுத்துறையில் பதவி வகித்த நபர்களே அந்த துறையின் செயலராக நியமிக்கப்படுவார்கள். அப்படியிருக்க, வெளியுறவுத்துறை தொடர்பில்லாத ஒருவர் இலங்கை வெளியுறவுத்துறை செயலராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் எஸ்.எல்.பி.பி.(S.L.P.P.) மிகப்பெரும் வெற்றிபெற்று ராஜபக்ச பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சூழலில் ரவிநாதாவின் இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 400 தலிபான் கைதிகளை விடுவிக்க தயாராகும் ஆப்கான்!