உலகத்தில் யாருக்குத்தான் வேலை செய்வதற்குப் பிடிக்கும். குழந்தைகள் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று சொல்லி அடம்பிடிப்பது போலவே, குதிரை வேலை செய்யாமல் ஓப்பியடிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஜின்கேங் குதிரை தன்மீது சவாரி செய்வதற்கு நபர்கள் வருவதைப் பார்த்தால் உடனடியாக மயங்கிவிழுவது போல் நடிக்கத் தொடங்கிவிடும். கூடாரத்தைவிட்டு நபர்கள் வெளியே போனதை உறுதி செய்தவுடன் மீண்டும் ஓடியாடி விளையாடத் தொடங்கிவிடும். குதிரையின் இந்தக் குறும்புத்தனத்தைப் பார்த்து அதன் உரிமையாளரே ரசிக்கிறாராம்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ஜின்கேங் குதிரை மீது சவாரி செய்யவந்த ஒருவர் கூறுகையில், "இது நம்பமுடியாதது தான். எங்களைப் பார்த்ததும் குதிரை மயங்கிவிழுவது மட்டுமல்லாமல் நாக்கை வெளியே தொங்கவிட்டு இறந்ததுபோலவே நடித்து ஆச்சரியப்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.
இது குறித்து மற்றொருவர் கூறுகையில், அந்தக் குதிரை ஒரு மேதை எனப் புகழ்ந்தார். தான் விரும்பாத ஒருவர் தனதருகே வரும்போதெல்லாம் குதிரையைப் போலவே செய்ய விரும்புவதாகவும் அந்நபர் குறிப்பிட்டார்.
குதிரையின் குறும்புத்தனமாக காணொலியை தற்போதுவரை 23 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
இதையும் படிங்க: பயத்தைக் காட்டிய 300 எலிகள்... பதறிப்போன இளம்பெண்!