ஜப்பானில் பணிபுரியும் பெண்கள் மற்றும் ஆண்கள் கோட் சூட் அணிய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இந்நிலையில், பெண்கள் ஹீல்ஸ் ரக காலணியை பணிபுரியும் இடத்தில் அணிய வேண்டும் என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டத்தை தெரிவித்துவருகின்றனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த நடைமுறையை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி 'கூ டூ' என்ற ஹேஸ்டேக் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பல்வேறு தரப்பட்ட பெண்களும் இந்த ஹேஸ்டேக் மூலம் தங்களது கருத்தை தொடர்ந்து பதிவிட்டுவருகின்றனர். இந்த ஹீல்ஸ் ரக காலணிகள் அணிவது மூலம் முதுகுத்தண்டு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பெண்களிடையே பெரும் புரட்சியை ஏற்படுத்தியதாக கருதப்படும் 'மீ டூ' ஹேஸ்டேக் இயக்கத்தை போன்று 'கூ டூ' என்பது பெரிதாக வேண்டும் என அந்நாட்டு பெண்ணியவாதிகள் எதிர்பார்க்கின்றனர்.