சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 பரவத் தொடங்கியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் சர்வதேசப் பொருளாதரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தற்போது பெரும்பாலான நாடுகள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு முழுவதும் சர்வதேசப் பொருளாதரம் சரிவையே எதிர்கொள்ளும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத்ததுடன் ஒப்பிடுகையில் ஜப்பானின் ஏற்றுமதி 4.9 விழுக்காடு குறைந்துள்ளது. ஜப்பானின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 15 விழுக்காடு குறைந்திருந்தது. அதேபோல ஆகஸ்ட் மாதம் 20.8 விழுக்காடு சரிந்திருந்த இறக்குமதியும் தற்போது 17.2 விழுக்காடு மட்டுமே சரிந்துள்ளது.
ஜப்பானில் இருந்து சீனாவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி 14 விழுக்காடும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி 0.7 விழுக்காடும் உயர்ந்துள்ளது. ஜப்பான் பொருளாதாரம் படிப்படியாக மீண்டும் வருவதற்கான மற்றொரு அறிகுறி இதுவாகும். துறை ரீதியாக பார்க்கும்போது கணினி ஏற்றுமதி கிட்டத்தட்ட 45 விழுக்காடு உயர்ந்தது.
சீனா மற்றும் ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்து வருவதால், ஜப்பான் பொருளாதாரமும் விரைவில் உயர்வை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வளர்ச்சி பாதையில் சீன பொருளாதாரம்!