ஷாங்காய் கூட்டறவு நாடுகளின் முக்கிய கூட்டம் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஆக்.8) ரஷ்யா புறப்பட்டார்.
ரஷ்யாவிற்கு செல்லும் வழியில் திடீர் பயணமாக ஈரானில் தரையிறங்கிய ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவேத் ஜாரிப்பை சந்தித்தார். அவருடன் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசத்த ஜெய்சங்கர் அங்கிருந்து ரஷ்யா புறப்பட்டார். முன்னதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த திங்கள்கிழமை (ஆக்.7) ஈரான் பயணம் மேற்கொண்டார்.
இந்தச் சூழலில் வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு விழா நடைபெறவுள்ள நிலையில், ஷாங்காய் கூட்டுறவு நாடுகள் பல்வேறு சர்வதேச, பிராந்திய அரசியல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளன.
குறிப்பாக, கரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெக்கும் வழிகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா வழங்க தெலங்கானா அரசு தீர்மானம்