இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம் ராணுவப் பயன்பாட்டில் மட்டுமே நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம், தற்போது சர்வதேச பயணிகள் விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சோதனை ஓட்டமாக ஒரு விமானத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி பரிசோதித்தனர். அது இலங்கை அரசுக்கு திருப்தியளித்த நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம் இன்று பயணிகளுக்கான விமான சேவையைத் தொடங்கியுள்ளது.
முன்னதாக யுத்தம் நடந்ததை அடுத்து யாழ்ப்பாணத்தில் இருந்து விமான சேவைகள் தரப்படாமல் இருந்தன. தற்போது இந்திய உதவியுடன் இந்த விமான நிலைய சேவையை இலங்கை அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை தேர்தல்: 4 வெளிநாட்டு குழுக்கள் கண்காணிப்பு