சீனாவின் உயிர்கொல்லி நோயான கரோனா வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிப்பவருக்கு ஒரு மில்லியன் யுவானை (சுமார் 1 கோடி) வெகுமதி வழங்குவதாக ஆக்ஷ்ன் கிங் ஜாக்கி சான் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஜாக்கி சான், இந்த வைரஸை கட்டுப்படுத்த அறிவியலும் தொழில்நுட்பமும் முக்கியம் என்றும், தன்னைப் போலவே பலருக்கும் அந்த எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வைரஸை குணப்படுத்த விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும் என தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
ஜாக்கி சானின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: பாவடை தாவணியில் பெருமாளைத் தரிசித்த சின்ன மயில் 'ஜான்வி'