ETV Bharat / international

ஆப்கான் சிறையில் ஐ.எஸ் தாக்குதல்: 29 பேர் பலி!

author img

By

Published : Aug 3, 2020, 10:54 PM IST

காபூல்: ஜலாலாபாத் சிறையில் ஐ.எஸ் அமைப்பு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

Afghan
Afghan

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கில் நங்ஹர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் பகுதி சிறைச்சாலையில், இன்று ( ஆகஸ்ட் 3) ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சிறைச்சாலை மீது அவர்கள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்திப் பின்னர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

இதில் பாதுகாவலர்கள், பொது மக்கள், சிறைவாசிகள் என, 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 2 ஆயிரம் பேர் உள்ள சிறையில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு ஆப்கானிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்தத் தாக்குதல் பின்னணியில் தலிபான்களுக்குத் தொடர்பு இருக்குமோ என சந்தேகம் எழுந்தது.

இதற்கு விளக்கமளித்தத் தலிபான் செய்தித் தொடர்பாளர், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலிலுள்ள நிலையில், இந்தத் தாக்குதலுக்கும் தலிபானுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சீனப் பொருள்கள்: ஒருபுறம் புறக்கணிப்பு… மறு புறம் தக்கவைப்பு… உமர் அப்துல்லா விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.