ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் சிறைச்சாலையில் ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலிலும், துப்பாக்கி சூடு தாக்குதலிலும் பாதுகாவலர்கள், பொது மக்கள், சிறைவாசிகள் என, 39 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 24 மணி நேரம் நீடித்த ஆப்கான் சிறைச்சாலை தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 11 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆப்கான் காவல் துறை நடத்திய விசாரணையில், " பாதுகாப்பு படையால் கொல்லப்பட்ட 11 பயங்கரவாதிகளில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் இஜாஸ் என கண்டறிந்துள்ளனர். இவர், கடந்த 2016ஆம் ஆண்டில் ஆப்கான் பயங்கரவாதிகள் படையில் இணைந்ததுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது, இஜாஸின் மனைவி, குழந்தைகள் ஆப்கான் பாதுகாப்பு படை காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.