நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.சி.பி எனப்படும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கே.பி. சர்மா ஒலி 2018ஆம் ஆண்டில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்மையில், கரோனா வைரஸ் தொடர்பாக இந்தியாவை கடுமையாக விமர்சித்த அவர், இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
இதன் விளைவாக, அவர் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் 44 உறுப்பினர்களில் 31 பேர் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர்.
இச்சூழலில், நேபாள நாட்டின் சீனத் தூதர் ஹூ யான்கி அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் மூத்த என்சிபி கட்சித் தலைவருமான மாதவ் குமாரை நேற்று கோட்டேஷ்வரில் சந்தித்து பேசினார்.
நேபாளத்தில் ஆளும் என்.சி.பி கட்சிக்குள் வளர்ந்து வரும் பிளவு, சச்சரவுகள் குறித்து ஹூ விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பு நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தீவிரமாக ஈடுபடுவதைக் காட்டுகிறது. மேலும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கையில் நேபாளம் ஈடுபட அவர் கே.பி. சர்மா ஒலிக்கு அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹூ யான்கிக்கும் மாதவ் குமாருக்கும் இடையிலான சமீபத்திய சந்திப்பு, இந்தியாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுக்க சீனா நேபாளத்தை தூண்டுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: பார்வைத் திறனற்ற குழந்தைகளுக்கான பிரெய்லி கரோனா புத்தகம்!