ஈரான் - ஈராக் நாடுகளுக்கிடையே 1980ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவிவருகிறது. இரு நாடுகளும் இரு துருவங்களாக இருந்துவந்த நிலையில் தற்போது இரு நாடுகளும் சமரசப் போக்கை நோக்கிப் பயணிக்கின்றன.
அதன் முக்கியப் பகுதியாக ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு ஈராக் பிரதமர் முஸ்தபா அல் கதிமி வருகை தந்துள்ளார். ஈராக் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு தந்த ஈரான் அதிபர் ஹசான் ரோஹானி, பிரதமரி்ன் இந்த வருகை வரலாற்றில் திருப்புனையாகக் கருதப்படும் எனத் தெரிவித்தார்.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் மோதல் போக்கு நிலவிவருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தொடர் பொருளாதாரத் தடையை விதித்துவருகிறது. அதேவேளை, சதாம் ஹூசைனின் ஆட்சி அகற்றப்பட்டதிலிருந்து ஈராக்கில் அமெரிக்கா ராணுவப் படையினர் முக்கிய பாதுகாப்பு பிரிவாக உள்ளனர். எனவே, ஈரான், ஈராக்கின் நெருக்கம் அமெரிக்காவுக்கும் மறைமுகக் குடைச்சலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போரிஸ்-மைக் பாம்பியோ சந்திப்பு: சீனாவுக்கு எதிராக கூட்டணி?