அரசாங்கத் தரப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இன்டர்போலின் சிறப்பு விசாரணைக்குழு இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இன்டர்போலின் சிறப்பு விசாரணைக்குழு ஆதரவளிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.