இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு, ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் நேற்று(ஜனவரி 09) புறப்பட்டது. இந்த விமானத்தில் ஆறு குழந்தைகள் உள்பட 56 பயணிகள் பயணம்செய்துள்ளனர். 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பிலிருந்து விலகியது. விமானத்தில் 56 பயணிகள், ஆறு பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாயமான விமானத்தின் சில பாகங்கள், கிழிந்த ஜூன்ஸ் ஆகியவை கடலில் மிதந்து கொண்டிருந்ததை இந்தோனேசிய அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது, அந்த பாகங்கள் ஜகார்த்தா துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விமானத்தைத் தேடும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.