ETV Bharat / international

ரஷ்யாவில் காந்தி புகைப்பட கண்காட்சி! - மாஸ்கோவில் புகைப்பட ஜெயந்தி

மாஸ்கோ: அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாக, இந்திய தூதரகம் சார்பில் ரஷ்யாவில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

Russia
author img

By

Published : Oct 2, 2019, 1:11 PM IST

அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினம், இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அவரின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக, இந்திய தூதரகம் மாஸ்கோவில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கண்காட்சியில், அண்ணல் காந்தி, லியோ டோல்சாய் ஆகியோர் இடையே இருந்த நல்லுறவை மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஆன்மாக்கள் என்ற கருப்பொருளில் இந்த கண்காட்சி நடக்கிறது. இங்கு அண்ணல் காந்தியடிகள் குறித்த அரிதான பல புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உண்மையின் வலிமை, அண்ணல் காந்தியடிகளின் சத்யாகிரக போராட்டம் ஆகியவற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் இரக்கம், அன்பு தீா்வாகும். இதனை காந்தியின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது என்று கண்காட்சியை காண வந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.