இதுகுறித்து அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல். இதுதொடர்பாக நடந்துவரும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.
நியூசிலாந்தில் நடந்த தாக்குதலுக்கும் இதற்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. தாக்குதல் குறித்து இந்தியா ஏற்கனவே எச்சரித்து இருந்தது. தாக்குதல் குறித்த தகவல் வந்தும் பாதுகாப்பை பலப்படுத்தாத அதிகாரிகள் அவர்களது பணியை இழக்க நேரிடும்” என்றார்.