இதுதொடர்பாக பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "5 ஆண்டுகள் வரை செயல்படக்கூடிய இ-சுற்றுலா விசாவை சீன மக்கள் விண்ணப்பிக்கலாம். விசா செயல்பாட்டில் இருக்கும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் வந்து செல்லலாம். இதற்கு ரூ. 5 ஆயிரத்து 684 நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருமுறை மட்டும் இந்தியாவுக்குள் வரவிரும்பும் சுற்றுலாப் பயணிகள் ரூ. ஆயிரத்து 776 கட்டணம் செலுத்தி இதனைப் பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல், மார்ச் மாதங்களில் வெறும் ரூ. 710 கொடுத்து இந்த விசாவினைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வகை விசாக்கள் 30 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
இதேபோன்று, ஓராண்டு செயல்படக்கூடிய சுற்றுலா விசாக்களின் கட்டணம் ரூ. இரண்டு ஆயிரத்து 842ஆக குறைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவோடு இ-கான்ஃபெரன்ஸ், பிசினஸ் விசா, இ-மெடிக்கல் விசா ஆகியவற்றையும் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா வரும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
இதையும் வாசிங்க : சீன அதிபரின் அழைப்பை ஏற்ற மோடி!