உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக நாடுகள் தீவிரமான கட்டுப்பாடு, முடக்கம் ஆகிய நடவடிக்கைகளை பின்பற்றிவருகின்றன. பாகிஸ்தானிலும் வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில் லாக் டவுன் என்ற முழுமுடக்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது.
இந்நிலையில் நாட்டுமக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான், கரோனா பாதிப்பை தடுக்க நாட்டுமக்களே முன்வந்து தங்களை முன்வந்து முடக்கிக்கொள்ள வேண்டுமே தவிர அரசு முடக்கத்தை மேற்கொள்ள வாய்ப்பில்லை. அரசு இதை மேற்கொண்டால் பெரும் சிக்கல் வெடிக்கும். பாகிஸ்தானில் சுமார் 25 விழுக்காடு மக்கள் தினக்கூலிகளாக உள்ளனர். எனவே பணக்காரர்கள் தேவையற்ற பதுக்கலில் ஈடுபடாமல் எளியமக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் கரோனா வைரஸால் 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானை அண்டை நாடாகக் கொண்டுள்ள பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் அதிகளவிலான வைரஸ் பாதிப்பு ஈரானிலிருந்து வந்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க மேலவை உறுப்பினருக்கு கரோனா