ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக, வணிக உறவுகளை துண்டித்துக் கொண்டது. மேலும், காஷ்மீர் குறித்து ஐநாவுக்கு எடுத்துச் செல்வோம் என்று உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், இதன் தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பை சாடி ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், " ஆரிய ஆதிக்கத்தை வலியுறுத்திய நாஜிகளைப் போன்று, இந்து ஆதிக்க சித்தாந்தங்களைக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு, காஷ்மீர் மட்டுமல்லாமல் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் ஒடுக்கும் என அஞ்சுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.