சீனாவின் தன்னாட்சி பிராந்தியங்களுள் ஒன்றான ஹாங்காங்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கவுன்சிலர் தேர்தல் நடைபெற்றது.
இதில், வரலாறு காணாத அளவிற்கு 71.2 விழுக்காடு பேர் வாக்களித்தனர். 2015இல் நடந்தத் தேர்தலின்போது வெறும் 47 பேரே வாக்களித்தனர்.
இதனிடையே ஜன நாயக உரிமை கோரி, கடந்த ஐந்து மாதங்களாக ஹாங்காங்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையில், நேற்று நடைபெற்ற இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
'குர்து மக்களுக்குத் துணை நிற்போம்' - அமெரிக்க துணை அதிபர் உறுதி
235 வார்டுகளில் 196 வார்டுகளை ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்து ஆண்டு நடைபெற்றவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், இந்தத் தேர்தலின் முடிவுகள் பலமாக எதிரொலிக்கக் கூடும்.