சீன ஆதரவு கேரி லேம் அரசாங்கம் ஜனநாயக ஜனநாயக சார்பு புத்தகங்களை நூலகங்களில் வாடகைக்கு கொடுக்க தடை விதித்துள்ளது. தி ஹாங் காங் ஸ்டேண்டர்ட் அளித்துள்ள தகவலின்படி, பொது நூலகத்தின் வலைதளத்தில் உள்ள பல ஜனநாயக சார்பு புத்தகங்களை வாடகைக்கு கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் செயல்பாட்டாளர் ஜோசுவா வாங் சீ-புங், வான் சின், தான்யா சான் ஆகியோரது புத்தகங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இதுகுறித்து ஜோசுவா வாங் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்து ஒரு வாரம் கூட நிறைவடையவில்லை. அதற்குள் ஹாங் காங் பொது நூலக தளத்தில் ஜனநாயக சார்பு புத்தகங்களை வாடகைக்கு கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் பிரசுரிக்கப்பட்ட எனது இரு புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் ஹாங் காங்கில் நாடு கடத்துவதற்கு எதிரான இயக்கம் உருவாகும் முன்பு பிரசுரிக்கப்பட்டவை என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி சீன அரசாங்கம் சர்வதேச பொருளாதார நகரமான ஹாங் காங் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.