ஹாங்காங் நாடு 1997ஆம் ஆண்டு சீனாவின் ஒரு பகுதியாக இணைந்தது. அதற்கு முன்னர் அது பிரிஷ்டிசின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது. சீனா மற்றும் ஹாங்காங் நிர்வாகம் இடையேயான ஒப்பந்தம் 50 ஆண்டுகால நடைமுறை கொண்டது. கம்யூனிச நாடான சீனாவில் கருத்து மற்றும் பத்திரிகை சுதந்திரம் கிடையாது.
ஆனால் ஹாங்காங்கில் மட்டும் உண்டு. இதனால் ஹாங்காங் மீது சிறப்பு கவனத்தை சீனா செலுத்த ஆரம்பித்தது. விளைவு, கருத்து மற்றும் பத்திரிகை உள்பட சில சுதந்திரங்கள் கேள்விக்குறி ஆகின.
இதையடுத்து ஹாங்காங் மக்கள், சீனாவுக்கு எதிராக விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீனா-ஹாங்காங் ஒப்பந்தம் 2047ஆம் ஆண்டோடு முடிவுக்கு வருகிறது. ஆனால் அதற்குள் சீனாவிடம் இருந்து வெளியேறி விட வேண்டும் என ஹாங்காங் மக்கள் விரும்புகின்றனர்.
இதற்கான போராட்டங்களை மக்கள் மனித உரிமைகள் முன்னணி என்ற அமைப்பு நடத்தி வருகிறது. இந்த போராட்டங்கள் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் சீனா இரும்புக்கரம் கொண்டு அடங்கி உள்ளது. இதற்கிடையில் அத்திப் பூத்தார் போல் அவ்வப்போது போராட்டத்துக்கு அனுமதியும் கொடுக்கும். இந்த நிலையில் நேற்று (டிச 8) ஹாங்காங் மக்களின் பேரணிக்கு காவலர்கள் அனுமதி அளித்தனர்.
இதையடுத்து ஹாங் காங்கில் மிகப்பெரிய பேரணி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னதாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக 11 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க : அமெரிக்க ஆதரவு பதாகைளுடன் சீனாவை சீண்டும் ஹாங்காங் போராட்டக்காரர்கள்