ETV Bharat / international

சீன அரசின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் : ஹாங்காங்கில் கண்ணீர் புகை குண்டு வீச்சு

author img

By

Published : May 24, 2020, 9:19 PM IST

ஹாங்காங் நகரில், சீன அரசு கொண்டுவரவுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வரும் நிலையில், ஹாங்காங் காவல் துறையினர் இன்று கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் களைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாங்காங்கில் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிப் பகுதியான ஹாங்காங், இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுவிக்கப்பட்டு, 1997ஆம் ஆண்டு முதல் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

சீனாவின் ’ஒரு தேசம், இரு அமைப்புகள்’ எனும் முன்மொழியப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஹாங்காங் தன்னாட்சி பெற்று செயல்பட்டு வந்தாலும், சீன அரசு அடக்குமுறைகளைத் தொடர்ந்து ஏவி வருவதால் ஹாங்காங் மக்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தேசிய பாதுகாப்புச் சட்ட மசோதாவை சீனா கொண்டு வரவுள்ள நிலையில், ’ஒரு தேசம், இரு அமைப்புகள்’ சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான, மக்கள் உரிமைகளுக்கு எதிரான செயல் இது என எதிர்ப்புகளைப் பதிவு செய்து ஹாங்காங்கில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, எந்தவொரு அனுமதி அளிக்கப்படாத கூட்டங்களிலும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்றும், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் ஹாங்காங் காவல்துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குடிமக்களிடம் வலியுறுத்தியிருந்தது.

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு எதிரான இந்தத் தீர்மானம் சீனாவின் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த போராட்டம் தற்போது வெடித்துள்ளது.

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்ட நிலைக் குழுவுக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்தத் தீர்மானம் வருகிற மே 28ஆம் தேதி ஹாங்காங்கில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அணு ஆயுத திறனை அதிகரிக்க வடகொரியா திட்டம்: ராணுவ அலுவலர்களுடன் கிம் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.