ஞாயிற்றுக்கிழமை (நவ.,3) ஹாங்காங் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு வணிக வளாகத்தில் திரண்டனர். அப்போது போராட்டக்காரர்களில் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தி, அதன் பின் உள்ளூர் அரசியல்வாதியின் காதில் ஒரு பகுதியைக் கடித்துத் துப்பினார். இது அங்கு திரண்டிருந்த அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.
இவ்விவகாரம் குறித்து காவல் துறையினர், 'இது மக்களின் 22ஆவது போராட்டமாகும். அவர்கள் அனைவரும் உணவகத்திற்குள் நுழைந்து அங்கிருந்து அமைதியாக முழக்கங்களை எழுப்பியும், புரட்சிப் பாடல்கள் பாடியும் தங்களின் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர். யாரும் எதிர்பார்க்காத தருணத்தில், வெள்ளை பனியன் அணிந்து வந்த நபர் கத்தியால் அனைவரையும் தாக்கத் தொடங்கினார். மேலும், அரசியல்வாதி ஒருவரின் காதை கடித்துத் துப்பினார்' என்று பொதுவெளியில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சர்ச்சைக்குரிய அந்த நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ஹாங்காங் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
இலங்கையில் தமிழர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு!