ETV Bharat / international

பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் தீபாவளி கொண்டாட்டம்!

author img

By

Published : Nov 15, 2020, 1:11 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கராச்சியில் உள்ள இந்துக்கள் தீபாவளி பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

Pakistan
Pakistan

தீபாவளி நேற்று கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் கராச்சி நகரில் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடினர். இதுகுறித்து பாகிஸ்தான் வாழ் இந்துவான பூஜா கூறுகையில், "விளக்குகளை ஏற்றி பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினோம்.

குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் தீபாவளியை இன்று கொண்டாடினோம். தீபாவளியை கொண்டாடுவதற்காகவும் வண்ணங்களை பூசி மகிழ்வதற்காக இங்கு வந்துள்ளோம். எனவே, போரிட்டு ரத்தக் களரியில் விளையாடுவதைக் காட்டிலும் வண்ணங்களை பூசி விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

கராச்சியில் உள்ள சுவாமி நாராயணா கோயில் தீபாவளியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கீதா குமாரி என்பவர் கூறுகையில், "கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தீபாவளியை கொண்டாடி வருகிறோம். இந்தப் பெருந்தொற்று விரைவில் சரி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" என்றார்.

14 ஆண்டு வனவாசத்திற்கு பிறகு ராவணனை ராமன் வீழ்த்திய நாளையே இந்துக்கள் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.