பாகிஸ்தானின் லாகூருக்கு அருகே இருக்கும் ரஹிம் யர் கான் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமியை, அந்த பகுதியை சேர்ந்த தாஹிர் தம்ரி என்பவர் தனது குடும்பத்தின் உதவியோடு கடத்தி சென்றதாகவும், பின்னர் கராச்சிக்கு அழைத்து சென்று கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு தாஹிருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடத்தி சென்ற 17வயது சிறுமியை மீட்க வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர். இதற்கு முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த ரீனா15 மற்றும் ரவீனா13 ஆகிய இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடதக்கது.