இந்தோனேசியாவில் சிறிய ரக விமானத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதையடுத்து விமானம் தடை செய்யப்பட்ட வனப்பகுதியான பப்புவா மாகாணத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்தோனேசியா ஆட்சியர்களை எதிர்க்கும் பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் புன்காக் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என பைலட் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்த சம்பவம் பைலட்களுக்கு தெரியாத நிலையில், பயணிகள் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். பிறகு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
பாதுகாப்பு வீரர்கள் தாக்குதல் நடத்திய நபர் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அந்த நபர் வனப்பகுதிக்குள் தப்பி சென்றுவிட்டார். பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு குறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை.
இதையும் படிங்க: ராம் லீலா மைதானத்தில் மோடி உரை: பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!