இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே 65% வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவை வென்றார். தேர்தலில் சஜித் பிரேமதாச 28% வாக்குகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் மொத்தமாக 80% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், சிங்களர்கள் உள்ள பெருவாரியான மாவட்டங்களில் கோத்தபய ராஜபக்சேவிற்கு அதிக அளவில் மக்கள் வாக்களித்துள்ளனர். மறுபுறம் தமிழர்கள் அதிகம் இருக்கக்கூடிய இலங்கை வடக்கு, கிழக்கு பகுதிகளில் சஜித் பிரேமதாச கணிசமான வாக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.
வெற்றி பெற்ற பிறகு கோத்தபய ராஜபக்சே நாட்டு மக்களுக்கு நன்றியினை தனது ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்திருந்தார். அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதிவியை வென்ற கோத்தபய ராஜபக்சே அடுத்த ஐந்து ஆண்டுகள் அந்நாட்டு அதிபராக பதவியேற்கவுள்ளாதால், தான் வகித்து வந்த பொதுஜன பெரமுன கட்சியின் துணைத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தன் பதவியை ராஜினாம செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரையடுத்து இந்த பதவிக்கு கோத்தபய ராஜபக்சே அண்ணன் மகிந்த ராஜபக்ச பதவியேற்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: இலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்ட சஜித் பிரேமதாச