ETV Bharat / international

உலகளவில் ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு!

உலகளவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 706 பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா
கரோனா
author img

By

Published : Dec 9, 2020, 3:40 PM IST

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். பல நாடுகளில், தடுப்பூசி மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை உலகளவில் 6 கோடியே 85 லட்சத்து 68 ஆயிரத்து 678 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 63 ஆயிரத்து 132ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 74 லட்சத்து 62 ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா
கரோனா அப்டேட்

நேற்று ஒரே நாளில் மட்டும் 6 லட்சத்து 3 ஆயிரத்து 164 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்பட்சமாக அமெரிக்காவில் 2 லட்சத்து 93 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.