உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறிவருகிறது. இந்த வைரஸ் நோய்க்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
இதுவரை உலகளவில் 3 கோடியே 14 லட்சத்து 82 ஆயிரத்து 599 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 69 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது
நேற்று (செப்.21) ஒரேநாளில் மட்டும் 2 லட்சத்து 52 ஆயிரத்து 496 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இந்தியாவில் தான் 75 ஆயிரம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.