உலக நாடுகளை மிரட்டி வரும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகளின் முன்னணி விஞ்ஞானிகளும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன.
இதுவரை உலக அளவில் இரண்டு கோடியே 89 லட்சத்து 46 ஆயிரத்து 556 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 24 ஆயிரத்து 610ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே எட்டு லட்சத்து 13 ஆயிரத்து 150ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (செப்.12) ஒரே நாளில் மட்டும் இரண்டு லட்சத்து 83 ஆயிரத்து 324 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.