கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. உலகம் முழுவதும் 215 நாடுகளில் பரவியுள்ள கரோனா தொற்றால் இதுவரை ஒரு கோடியே 46 லட்சத்து 47 ஆயிரத்து 584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்றால் உலகம் முழுவதும் 6 லட்சத்து 8 ஆயிரத்து 987 பேர் உயிரிழந்துள்ளனர். 87 லட்சத்து 37 ஆயிரத்து 852 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 38 லட்சத்து 98 ஆயிரத்து 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 289 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் 20 லட்சத்து 99 ஆயிரத்து 896 பேரும், இந்தியாவில் 11 லட்சத்து 11 ஆயிரத்து 780 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சீனாவில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. நேற்று பெய்ஜிங்கில் புதிதாக 22 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு மாதத்திற்கு தப்பிய ஒலியின் பிரதமர் பதவி