கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை ஒவ்வொன்றாக பதம்பார்த்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பின் மூலம் கோரத் தாண்டவத்தைத் தான் தொடங்கியுள்ளேன் என்பதைக் கோவிட்-19 காட்டிவருகின்றது. இதைக் கட்டுப்படுத்தத் தனிமைப்படுத்தல், கிருமி நாசினி தெளிப்பு, ஊரடங்கு உத்தரவு என, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பஞ்சம் இல்லை.
இருப்பினும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் உலகளவில் பல்வேறு நாடுகள் திணறிவருகின்றன. இதுவரை, உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. இரண்டரை லட்சம் மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். குறிப்பாக, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்பெயினில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சமீபத்தில் குறையத் தொடங்கியுள்ளன. சீனாவில் கோவிட்-19 உயிரிழப்பின் எண்ணிக்கையும் அடியோடு நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் புலிக்கு கரோனா தொற்று!