உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை ஒரு கோடியே 48 லட்சத்து 57 ஆயிரத்து 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 89 லட்சத்து 10 ஆயிரத்து 967 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மறுபுறம் 6 லட்சத்து 13 ஆயிரத்து 335 பேர் உயிரிழந்தனர்.
உலகிலேயே கரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் தான் பதிவாகியுள்ளது. இதுவரை 39 லட்சத்து 61 ஆயிரத்து 429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 18 லட்சத்து 49 ஆயிரத்து 989 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 834 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக பிரேசிலில் 21 லட்சத்து 21 ஆயிரத்து 645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14 லட்சத்து 9 ஆயிரத்து 202 பேர் குணமடைந்துள்ளனர். 80 ஆயிரத்து 251 பேர் உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 54 ஆயிரத்து 917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 லட்சத்து 24 ஆயிரத்து 702 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 99ஆக உள்ளது.
கரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவில் கட்டுக்குள் இருந்த நிலையில், ஹாட் ஸ்பாட்டாக அறியப்பட்ட விக்டோரியாவில் புதிதாக 374 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று (ஜூலை 20) மூன்று பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 69ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட்19 பரிசோதனையில் வெற்றிகண்ட ஆக்ஸ்போர்டு பல்கலை!